பிரபல மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

 

பிரபல மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: பிரபல மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மும்பையின் தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் என்று கூறிய ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவ்விரு  ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பிரபல மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இந்த ஹோட்டல்களுக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஹோட்டல்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. முன்னதாக நேற்று பாகிஸ்தான் கராச்சி பங்குச் சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26, 2008 அன்று இந்திய வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்தது. இதில் 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.