கழுத்தை நெரித்து …தண்ணீர் தொட்டியில் அமுக்கி ..-.பக்கத்து வீட்டு சண்டையில் சிறுவனை கொன்ற கொடூரமான பெண் ..

பக்கத்து வீட்டு சண்டையில் மும்பையில் ஒரு பெண் நாலு வயது சிறுவனை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

மும்பை அந்தேரியில் உள்ள சந்தோஷி மாதா நகரில் மதுகாதே என்ற 39 வயது பெண் வசித்து வந்தார். அவருக்கும் பக்கத்து வீட்டிற்கும் அடிக்கடி சண்டை வருமாம் . இதனால் அவர்களுக்கிடையே பகை நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது.கடந்த திங்கள்கிழமையன்று இரவு மதுகாதே தன் பக்கத்து வீட்டு நாலு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்தார் .பிறகு வீட்டிற்கு வந்த சிறுவனை தன்னுடைய லெக்கிங்ஸ் உடையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் .பிறகு சிறுவனின் பிணத்தை வீட்டின் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கடித்துவிட்டார்.

கைது
மறுநாள் வரை தன்னுடைய நான்கு வயது சிறுவனை காணாத அவனின் தாயார் அந்த பகுதி முழுவதும் தேடிபார்த்துள்ளார் .எங்கும் சிறுவனை காணாததால் சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கொண்டு மதுகாதே வீட்டிற்குள் நுழைந்து தேடியபோது அவர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சிறுவனின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர் .பிறகு மது மீது சிறுவனின் தாயார் போலீசில் புகார் தந்தார் .போலீசார் விரைந்து வந்து மதுக்காதே வினை கொலை வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...