200 ரன்களை அடிக்கும் முனைப்பில் மும்பை இண்டியன்ஸ் #MIvsKKR

 

200 ரன்களை அடிக்கும் முனைப்பில் மும்பை இண்டியன்ஸ் #MIvsKKR

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு போட்டியின் தன்மை இருக்கிறது. பலம் கொண்ட அணி எனப் பலரும் கூறும் அணி அன்றைய போட்டியில் தோற்கிறது.  யாருமே கவனம் செலுத்தாத சிறிய அணி அசத்தலான வெற்றியைப் பெறுகிறது.

இன்று மும்பை இண்டியன்ஸ் அணியோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

200 ரன்களை அடிக்கும் முனைப்பில் மும்பை இண்டியன்ஸ் #MIvsKKR

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஹ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்திருக்கிறார். மும்பை வலுவான அணி. அதனால் அது எடுக்கும் ஸ்கோருக்கு ஏற்ப தம் ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

மும்பை தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா இறங்கினர். ஒரு ரன் எடுத்த நிலையில் டி காக் அவுட்டாக சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்.

200 ரன்களை அடிக்கும் முனைப்பில் மும்பை இண்டியன்ஸ் #MIvsKKR

மிக நிதானமாக இருவரும் ஆடி வருகின்றனர். 10 ஓவர் முடிவில் 94 ரன்களைக் குவித்துள்ளனர். ரோஹித் 45 ரன்களோடும், சூர்யகுமார் யாதவ் 45 ரன்களோடும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

இப்போதைய நிலையில் மும்பை அணியின் டார்கெட் குறைந்தது 200 ரன்களை அடிப்பது போல தெரிகிறது. இதே நிலை நீடித்தால் அது சாத்தியமாகும். ஸ்கோர் 200 ரன்களைக் கடந்துவிட்டால் கொல்கத்தாவுக்கு சிரமமான ஸ்கோராக அமைந்துவிடும்.

10.5 வது ஓவரில் சூர்யகுமார் 47 ரன்களோடு அவுட்டாகி விட்டார். திவாரி இறங்கி உள்ளார்.