சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்… மண் விளக்குகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள்

 

சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்… மண் விளக்குகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள்

இந்தியர்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிப்பதால் மகாராஷ்டிராவில் கடைக்காரர்கள் மண் விளக்குகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

சீன தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் நம் நாட்டில் அந்நாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற போது இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து அவர்களை விரட்டி அடித்தனர். அப்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க தொடங்கினர்.

சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்… மண் விளக்குகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள்
மண் விளக்குகள்

இதனால் இந்தியாவில் சீன பொருட்கள் விற்பனை மந்தமானது. தற்போது பண்டிகை காலம் என்பதால் மகாராஷ்டிராவில் மண் விளக்குகள் விற்பனை களைகட்டியுள்ளது. கடைக்காரர்கள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட மண் விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த விளக்குகள் விற்பனை வாயிலாக நல்ல வருவாய் கிடைக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்… மண் விளக்குகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள்
வண்ண மண் விளக்குகள்

மும்பையில் மண் விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை கடையை நடத்தி வரும் திலீப் கூறுகையில், இதற்கு முன் சீனாவிலிருந்து வந்த விளக்குகளை விற்பனை செய்தோம். சீன பொருட்களை வாடிக்கையாளர்கள் புற்கணிப்பதால் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கையால் செய்யப்பட்ட செய்யப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே வைத்திருக்கிறோம். அவற்றின் விற்பனை நன்றாக உள்ளது. நாடு முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்களை பெறுகிறோம். எங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் வேண்டும் இதனால் எங்களை பற்றி அதிகமான உலக மக்கள் அறிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.