“கை கால் நடுங்குது ,உடலெல்லாம் உதறுது” -போதைக்காக சாலைகளில் காத்திருக்கும் கூட்டம்.

 

“கை கால் நடுங்குது ,உடலெல்லாம் உதறுது” -போதைக்காக சாலைகளில் காத்திருக்கும் கூட்டம்.

மும்பை புறநகர் கோரேகானில் ரூ .14.40 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை வைத்திருந்த 22 வயதான போதைப்பொருள் விற்பனையாளரை மும்பை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

“கை கால் நடுங்குது ,உடலெல்லாம் உதறுது” -போதைக்காக சாலைகளில் காத்திருக்கும் கூட்டம்.


முமபையின் குற்றப்பிரிவு போலீசுக்கு கோரேகான் என்ற இடத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .அதனால் திங்கள்கிழமை இரவு இப்பகுதியில் போலீசார் அவர்களை பொறி வைத்து பிடிக்க திரண்டு வந்தனர் .அப்போது நூர்மொஹம்மது மெஹபூப் கான் என்பவர் இரவு 9.20 மணிக்கு பிலிம் சிட்டி சாலையில் , யாரோ ஒருவருக்காகக் காத்துக்கொண்டு அங்குள்ள ஒரு குறுக்கு சந்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் அதிகாரிகள் அவரை நோட்டமிட்டு சந்தேகப்பட்டு கைது செய்தனர்.
பிறகு போலீசார் அவரை சோதனை செய்தபோது ​​அவர் வைத்திருந்த 480 கிராம் மெபெட்ரோன் என்ற போதை பொருளை அவரிடமிருந்து மீட்டனர்.அந்த போதை பொருளை அவர்கள் “மியாவ் மியாவ்” அல்லது எம்.டி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு செயற்கையாக போதை உண்டாக்கும் பொருளாகும் .
பிறகு அவரை விசாரித்த போலீசார், அவர் குர்லாவில் உள்ள கமானி பகுதியில் வசிப்பவர் என்றும், அவர் போதைக்கு அடிமையாகி அது இல்லாவிட்டால் கை கால் நடுங்கி துடிக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த போதைப்பொருளை வழங்க வந்ததாக விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர் இதற்கு முன்பு கொலை முயற்சி உட்பட, 10 கடுமையான குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும்,மும்பை புறநகர் கட்கோபரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கிரிமினல் வழக்குகளிலும் அவர் தேடப்பட்டார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.இந்த போதை பொருள் கூட்டம் , தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை எங்கிருந்து வாங்கினார்கள், யாருக்கு அவர் அதை வழங்கப் போகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் முயல்கின்றனர்.மும்பை நீதிமன்றம் இந்த குற்றவாளியை போலீஸ் காவலில்,அக்டோபர் 3 வரை ரிமாண்ட் செய்துள்ளது.

“கை கால் நடுங்குது ,உடலெல்லாம் உதறுது” -போதைக்காக சாலைகளில் காத்திருக்கும் கூட்டம்.