கனமழையால் அவதியுறும் மும்பை! – ரெட் அலர்ட்டால் பீதி

 

கனமழையால் அவதியுறும் மும்பை! – ரெட் அலர்ட்டால் பீதி

மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கனமழையால் அவதியுறும் மும்பை! – ரெட் அலர்ட்டால் பீதிதென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு குறித்த காலத்தில் தொடங்கியது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மும்பை நகரில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் நிறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழையால் அவதியுறும் மும்பை! – ரெட் அலர்ட்டால் பீதி

மழை நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மும்பை நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மழைக்கான ரெட் அலர்ட்டை வெளியிட்டுள்ளது.

கனமழையால் அவதியுறும் மும்பை! – ரெட் அலர்ட்டால் பீதிஅதில், மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை அல்லது மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புனே, நாசிக், துலே, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். கடலோர பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.