RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பை அளித்து வருகின்றன. நேற்றைய போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிடல்ஸ் மோதின. இதில் 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. ஆனால், இன்றைய போட்டியில் மோதும் இரு அணிகளும் பெங்களூர் அணியிடம் தோற்றவை.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

மும்பை இண்டியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ். இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்?

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

மும்பை இண்டியன்ஸ் டீம் – பலம்: பேட்டிங் மிகப் பெரிய பலம். அதுவும் ரோஹித் ஷர்மா, டி காக் நல்ல ஓப்பனர்ஸ். சூர்யகுமாரும் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார். 99 ரன்கள் குவித்த இஷான் கிஷான், ஹிர்திக் பாண்டியா, பொலார்டு வரை பேட்டிங் நல்ல வரிசையில் உள்ளது.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

பவுலிங்: ஃபார்ம் அவுட்டில் இருந்த பும்ரா, ஹைதராபாத் போட்டியில் அசத்திவிட்டார். போல்ட், பட்டின்சனும் ரன்கள் அதிகம் கொடுக்காது விக்கெட் பறிப்பவர்களாக இருக்கிறார்கள். பொலார்டும் ரன்ரேட்டை 7.00 யை ஒட்டியே வைத்திருக்கிறார். க்ருனால் பாண்டியாவும் சரியாகவே கைக்கொடுக்கிறார்.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

பலவீனம்: ஓப்பனிங்கில் ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் நல்ல வீரர்கள் என்றாலும் இருவருமாகச் சேர்ந்த பார்டனர்ஷிப் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருவரில் யாரேனும் ஒருவரே ஒரு போட்டியில் நன்றாக ஆடுகிறார். மற்றவர் சொற்ப ரன்னில் அவுட்டாகிறார். அல்லது இருவருமே சொற்ப ரன்களில் அவுட்டாகி விடுகின்றனர். நிலைத்த குறைந்த பட்சம் 6 ஓவர் வரை நல்ல பார்ட்டனர்ஷிப் கொடுக்க வேண்டியது அவசியம்.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

பவுலிங்கில் பும்ரா ஃபார்மிங் இன்றும் நீடிக்க வேண்டும். க்ருனால் பாண்டியா ரன் அள்ளிகொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் – பலம்: ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் திவட்டியா, ஆர்ச்சர் லோம்ரார் வரை நல்ல பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. சஞ்சு சாம்சன், ஸ்மித், ராகுல் திவட்டியா ஆகியோர் தொடர்ச்சியான நீடித்த ஆட்டத்தை அளித்து வருகிறார்கள். திவட்டியா ஒரு ஓவரில் 5 சிக்ஸர் வீசியதை எவராலும் மறக்க முடியாது. அநேகமாக அது இந்த ஐபிஎல் சீசனில் முறியடிக்கப் படுமா என்பதே சந்தேகம்தான். அந்த பேட்டிங்கை அவர் இன்றும் ஆடினால் பின் ஓவர்களில் ரன் எகிரும்.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

பவுலிங்கில் ராகுல் திவட்டியா, டாம் கரன், ஆர்ச்சர், உன்கட் ஆகியோர் நன்றாகவே வீசி வருகிறார்கள். ராஜ்புட், ப்ராக், ஸ்ரேயஸ் கோபால் என 7 பவுலர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் டீம் இருப்பது.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

பலவீனம்: கொஞ்சம்கூட ஃபார்மிலேயே இல்லாத ராபின் உத்தப்பா இதுவரை நடந்த 4 போட்டிகளில் முறையே ராபின் உத்தப்பா எடுத்த ரன்கள் 5,9,2,17. நான்காம் இடத்தில் இறங்கும் ஒருவர் இப்படி இருப்பது அணியின் வெற்றியைப் பெரிதும் பாதிக்கும். பிறகு பட்லர் இன்னும் ஃபார்ம்க்குத் திரும்ப வில்லை. இரண்டு போட்டிகளில் 21, 22 ரன்களோடு திரும்பி விடுகிறார். ஸ்மித்தோடு அவர் நல்ல ஓப்பனிங் பார்டனர்ஷிப் தந்தால் மட்டுமே ரன்ரேட் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

சஞ்சு சாம்சன் மைதானத்தில் நிலைத்து ஆட, இரண்டு ஓவர்கள் அவர் பெரிய ஷாட் ஆட முயலாமல் இருக்க வேண்டும். பவுலர்களில் மேட்ச்க்கு ஒருவர் ரன்களை வாரிக்கொடுத்து விடுகின்றனர். அதனால், எதிரணியின் ஸ்கோர் சட்டென்று அதிகமாகி விடுகிறது. குறிப்பாக சேஸிங் எனும்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

RCB – யிடம் தோற்ற இரு அணிகள் மோதல் – மும்பை Vs ராஜஸ்தான் #IPL

இரு அணிகளின் பலம், பலவீனங்களைப் பார்க்கும்போது மும்பைக்கு வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியில் அதிக ஸ்கோரை சேஸ் செய்த அணி ராஜஸ்தான் எனும்போது நம் கணிப்பை மீறியதாகவும் அமையலாம்.