#IPL2021 : பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பையிடம் தோற்றுப்போன சென்னை

 

#IPL2021 : பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பையிடம் தோற்றுப்போன சென்னை

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல்.லில் சிறந்த இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் பாப் டு ப்ளஸிஸ் மொயின் அலி மற்றும் ராயுடு ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.

Image

இமாலய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். டி காக் 38 ரன்களிலும்,சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இதன் பின் குருணல் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஜோடி சேர்ந்தனர். குருணல் பாண்டியா பொறுமையாக ஆட பொல்லார்டு அதிரடியாக ஆடி 6 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்பட 17 பந்துகளில் அரைசதம் கடந்தார்.குருணல் பாண்டியா 32 ரன்களில் சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்திக் பாண்டியா பொல்லார்டு உடன் ஜோடி சேர்ந்தார்.

Image

ஹர்திக் பாண்டியா 15 ரன்களில் ஆட்டம் இழக்க , கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைபட்டது , நிகிடி வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது மும்பை. இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொல்லார்டு 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று வந்த சென்னை அணிக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்தது.