டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி ! பாயிண்ட் டேபிளில் முதலிடமும் மும்பைக்கே!

 

டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி ! பாயிண்ட் டேபிளில் முதலிடமும் மும்பைக்கே!

இன்று விடுமுறை தினம் என்பதால் ஐபிஎல் திருவிழாவில் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வென்றது.

இரண்டாம் போட்டியில்மோதுகின்றன மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.

டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி ! பாயிண்ட் டேபிளில் முதலிடமும் மும்பைக்கே!

முதலில் ஆடிய டெல்லி அணியில் தவான் 69, ஸ்ரேயாஸ் 42, ரஹானே 15 ரன்கள் எடுக்க 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. க்ருனால் பாண்டியா, 4 ஓவர் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி ! பாயிண்ட் டேபிளில் முதலிடமும் மும்பைக்கே!

அடுத்து ஆடிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்களில் அவுட்டானார். டி காக் மற்றும் சூரியகுமார் நிலைத்து ஆடினர். இருவரும் 53 ரன்கள் எடுத்திருந்தனர்.

டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி ! பாயிண்ட் டேபிளில் முதலிடமும் மும்பைக்கே!

இஷான் கிஷன் 28, பொலார்டு 11, க்ருனால் பாண்டியா 12 ரன்களோடு இரண்டு பந்துகள் மிச்சமிருக்கும்போதே 166 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கைக் கடந்தனர்.

மும்பை அணி ஏழு போட்டிகளில் விளையாடி, ஐந்து போட்டிகளில் வென்று நெட் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. டெல்லி அதே பயிண்ட்டுகளுடன் இருந்தாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.