Home விளையாட்டு கிரிக்கெட் டெல்லியை வீழ்த்தி பிரமாண்ட வெற்றி பெற்ற மும்பை

டெல்லியை வீழ்த்தி பிரமாண்ட வெற்றி பெற்ற மும்பை

ஐபிஎல் திருவிழாவில் இன்றைய முதல் போட்டியில் மோதும் அணிகள் டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்!

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது மும்பை இண்டியன்ஸ். மூன்றாம் இடத்தில் உள்ளது டெல்லி கேப்பிடல்ஸ். இன்று வென்றால் பிளே ஆஃப் செல்ல எளிதாக இருக்கும் டெல்லிக்கு.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, டெல்லி பேட்டிங் ஆடியது. ஓப்பனிங் வீரர்கள் பிரத்திவ் ஷா 10, தவான் 0 என்று அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 25, பண்ட் 21, ஸ்டொயினிஸ் 2, ஹெட்மெயர் 11, அஸ்வின் 12 என்று வரிசையாக விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன.

மும்பை அணி பவுலர்களின் அசத்தலான பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மும்பை தரப்பில் போல்ட், பும்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெயந்த் யாதவ் 3 ஓவர்கள் வீசி 18 ரன்களும், க்ருணால் பாண்டியா 3 ஓவர் வீசி 13 ரன்களுமே கொடுத்திருந்தனர்.

111 எனும் எளிய இலக்கோடு ஆடத் தொடங்கினர் மும்பை அணி வீரர்கள். ஓப்பனிங் வீரர்களாக இஷான் கிஷானும் டி காக்கும் இறங்கினார்கள். 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் நொர்ட்ஜெ பந்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார் டி காக்.

பிறகு, கிஷனுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார். சென்ற போட்டியில் இறுதிவரை நிலைத்து நின்று சூர்யகுமார் ஆடியதைக் குறிப்பிட வேண்டும்.14.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்றது மும்பை.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘அத்திவரதர் போல விஜயகாந்த் வரும் போது பிரளயமே வரும்’ – விஜய பிரபாகரன் அதிரடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை எதிர் நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது பிரதான கட்சிகளான...

‘சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போகிறேன்’: ராதிகா சரத்குமார் திடீர் அறிவிப்பு!

கணவருடன் இணைந்து கட்சிப் பணியாற்றுவதற்காக, சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக ராதிகா சரத்குமார் அறிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து...

‘பாலியல் வன்கொடுமையால் எச்.ஐ.வி பாதித்த சிறுமி’ : தந்தையே மகளுக்கு செய்த கொடூரம்!

மதுரை அருகே 13 வயது சிறுமியை எச்.ஐ.வி பாதித்த வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி பகுதியை...

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : ராஜா முத்தையா கல்லூரி மாற்றம்!

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் அதிக...
Do NOT follow this link or you will be banned from the site!