அண்டர்டேக்கர் ஓய்வு: வேர்ல்டு ஹெவிவெயிட் சாம்பியன் பெல்ட் உடன் ரோகித் ஷர்மா – மும்பை இந்தியன்ஸ் பிரியாவிடை அளிப்பு

அண்டர்டேக்கர் ஓய்வு: வேர்ல்டு ஹெவிவெயிட் சாம்பியன் பெல்ட் உடன் ரோகித் ஷர்மா – மும்பை இந்தியன்ஸ் பிரியாவிடை அளிப்பு

மும்பை: WWE போட்டிகளில் இருந்து அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரை கவுரவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி பகிர்ந்துள்ளது.

WWE போட்டிகளில் இருந்து அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் #ThankYouTaker என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இந்நிலையில், 30 வருடங்களாக WWE போட்டிகளில் கோலோச்சிய அண்டர்டேக்கரை கவுரவப்படுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா வேர்ல்டு ஹெவிவெயிட் சாம்பியன் பெல்ட்டுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஆகும்.

அண்டர்டேக்கர் ஓய்வு: வேர்ல்டு ஹெவிவெயிட் சாம்பியன் பெல்ட் உடன் ரோகித் ஷர்மா – மும்பை இந்தியன்ஸ் பிரியாவிடை அளிப்பு

WWE ஆவணப்படங்களின் “தி லாஸ்ட் ரைடு” இன் கடைசி எபிசோடில் தி அண்டர்டேக்கர் தனது ஓய்வு முடிவு குறித்து அறிவித்துள்ளார். மீண்டும் WWE போட்டிகளில் தான் பங்கேற்க போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். WWE ட்விட்டர் பக்கத்தில் அண்டர்டேக்கர் குறித்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அண்டர்டேக்கர் ஓய்வு: வேர்ல்டு ஹெவிவெயிட் சாம்பியன் பெல்ட் உடன் ரோகித் ஷர்மா – மும்பை இந்தியன்ஸ் பிரியாவிடை அளிப்பு

கடந்த 1990 முதல் இப்போதைய 2020 வரை என்று மூன்று தசாப்தங்களாக WWE போட்டிகளில் அண்டர்டேக்கர் பங்கேற்று வந்தார். இறந்த பின்னும் உயிருடன் வந்ததாக இவரை WWE போட்டிகளில் காட்டியதால் டெட்மேன் என்று இவரை குறிப்பிடுவார்கள். இவர் மேடைக்கு வருவதற்கு முன் கும்மிருட்டு பரவ விடுவதுடன், மரண ஓசை போன்ற மணியோசை ஒன்றை எழுப்புவார்கள். இதன் மூலம் அண்டர்டேக்கர் வருகையை உணர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்.