“உன் மனைவியின் ரத்தம் உன் ட்ரெஸ்ஸில் எப்படி வந்தது?” -கோர்ட் கேள்வியால் திணறிய மனைவியை கொன்ற என்ஜினியருக்கு ஆயுள் தண்டனை ..

“உன் மனைவியின் ரத்தம் உன் ட்ரெஸ்ஸில் எப்படி வந்தது?” -கோர்ட் கேள்வியால் திணறிய மனைவியை கொன்ற என்ஜினியருக்கு ஆயுள் தண்டனை ..

தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்து விட்டு,அதை மறைத்த ஒரு என்ஜினியருக்கு மும்பை கோர்ட் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததது .

“உன் மனைவியின் ரத்தம் உன் ட்ரெஸ்ஸில் எப்படி வந்தது?” -கோர்ட் கேள்வியால் திணறிய மனைவியை கொன்ற என்ஜினியருக்கு ஆயுள் தண்டனை ..

மும்பையின் முலுண்ட் பகுதியில் வசிக்கும் ஜெயேஷ் மத்லேகர் என்ற ஒரு பொறியாளர், அவரது மனைவி ஸ்ரேயாவை (33) திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருக்கிறாரா? என்ற சந்தேகத்தின் பேரில் அடிக்கடி அவரை சந்தேகப்பட்டு 2005ம் ஆண்டு முதல் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் .இதனால் அவர் அடிக்கடி தன்னுடைய தாய் வீட்டுக்கு தன்னுடைய குழந்தையோடு சென்று விடுவார் .ஆனால் அவர் அங்கும் தேடி வந்து கொடுமை படுத்தியதால் அவரின் தாயார் தன்னுடைய மகளை கணவரோடு சேர்த்து வைத்துவிட்டு சென்றுள்ளார் .
இந்நிலையில் 2017ம் ஆண்டு அவர் தன்னுடைய மனைவியை அடித்து கொலை செய்து விட்டார் .இந்த வழக்கு கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்றது .அப்போது அவர் கோர்ட்டில் தான் தன்னுடைய மனைவியை கொலை செய்யவில்லை என்றும் ,சம்பவம் நடந்த ஆண்டு ஹைதராபாத்தில் இருந்தேன் என்றும் கூறினார் .ஆனால் கோர்ட்டில் அதற்கான ரயில் டிக்கெட்டை அவர் தரவில்லை .மேலும் , கோர்ட் அவரின் உடையில் அவரின் மனைவியின் ரத்தம் இருந்ததை சில டெஸ்டுகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தியது .இதனால் மும்பை கோர்ட் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது .

“உன் மனைவியின் ரத்தம் உன் ட்ரெஸ்ஸில் எப்படி வந்தது?” -கோர்ட் கேள்வியால் திணறிய மனைவியை கொன்ற என்ஜினியருக்கு ஆயுள் தண்டனை ..