குணமடைந்தவர்களிடமிருந்து கொரோனா மருந்துகளை சேகரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் டாக்டர் தம்பதியினர்

குணமடைந்தவர்களிடமிருந்து கொரோனா மருந்துகளை சேகரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் டாக்டர் தம்பதியினர்

மும்பையை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களிடமிருந்து பயன்படுத்தாத கொரோனா மருந்துகளை சேகரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மும்பையில் மருத்துவம் செய்துவரும் டாக்டர் தம்பதியினர் டாக்டர் மார்கஸ் ரான்னி அவரது மனைவி டாக்டர் ரெய்னா. இவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து பயன்படுத்தாத மருந்துகளை சேகரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். இது குறித்து டாக்டர் மார்கஸ் ரான்னி கூறுகையில், நாங்கள் இதனை மே 1ம் தேதி தொடங்கினோம். நாங்கள் வீட்டுவசதி சங்கங்களிலிருந்து மருந்துகளை சேகரித்து அவற்றை வாங்க முடியாதவர்களுக்கு வழங்குகிறோம் என தெரிவித்தார்.

குணமடைந்தவர்களிடமிருந்து கொரோனா மருந்துகளை சேகரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் டாக்டர் தம்பதியினர்
சேகரித்த மருந்துகள்

டாக்டர் ரெய்னா கூறியதாவது: எங்களது பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் கொரோனா பாதிக்கப்பட்டபோது எங்களுக்கு இந்த யோசனை வந்தது. அவர்களுக்கு மருந்து தேவை. இந்த மருந்துகள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் சிலர் கொரோனாவிலிருந்து மீண்டு இருந்தனர். எனவே அவர்களின் மருந்துகளை எடுத்து தானமாக கொடுக்க முடிவு செய்தோம். அதன்பிறகு, நாங்கள் அருகிலுள்ள குடியிருப்புகளை சேர்ந்த 7 முதல் 8 பேர் உதவியை பெற்று ஒரு குழுவை அமைத்து, மருந்துகளை வாங்க வெளியே செல்ல முடியாதவர்களுக்கு அல்லது கோவிட் மருந்துகளை வாங்க முடியாத எவருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பணியை தொடங்கினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குணமடைந்தவர்களிடமிருந்து கொரோனா மருந்துகளை சேகரித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் டாக்டர் தம்பதியினர்
டாக்டர் மார்கஸ் ரான்னி அவரது மனைவி டாக்டர் ரெய்னா.

கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளிடமிருந்து வெறும் 10 நாட்களில் 20 கிலோ பயன்படுத்தப்படாத கோவிட்-19 மருந்துகளை இந்த டாக்டர் தம்பதியினர் சேகரித்து உள்ளனர். இந்த மருந்துகள் இந்தியாவில் உள்ள கிராமப்புற மாவடடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக நன்கொடையாக வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.