மும்பை தாராவியில் மேலும் 12 பேருக்கு கொரோனா! மகாராஷ்டிராவில் 1,28,205 பேருக்கு பாதிப்பு

 

மும்பை தாராவியில் மேலும் 12 பேருக்கு கொரோனா! மகாராஷ்டிராவில் 1,28,205 பேருக்கு பாதிப்பு

மும்பை: தாராவி பகுதியில் மேலும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைபகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே, தாராவி பகுதியை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

மும்பை தாராவியில் மேலும் 12 பேருக்கு கொரோனா! மகாராஷ்டிராவில் 1,28,205 பேருக்கு பாதிப்பு

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,170 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யாரும் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் இதுவரை 80 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தாராவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி வீதம் 1.02 சதவீதமாக குறைந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 88 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் மட்டும் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 3,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,205 ஆக அதிகரித்துள்ளது.