மும்பை சிட்டி அணி தொடர்ந்து முதலிடம் – எப்படி? ISL கால்பந்து திருவிழா

 

மும்பை சிட்டி அணி தொடர்ந்து முதலிடம் – எப்படி? ISL கால்பந்து திருவிழா

ISL கால்பந்து திருவிழா அனல் பறக்கும் போட்டிகளைத் தினந்தோறும் நடத்தி வருகிறது. தினந்தோறும் மாலை நேரத்தில் எந்த அணி வெல்லும் பாயிண்ட் டேபிளில் முன்னேறிச் செல்லுமா, பின் நகருமா என்று ஆவலோடு ஒவ்வொரு போட்டியையும் கவனித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில், மும்பை சிட்டி அணியும் ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. இந்தப் போட்டி கோவா GMC மைதானத்தில் நடைபெற்றது.

மும்பை சிட்டி அணி தொடர்ந்து முதலிடம் – எப்படி? ISL கால்பந்து திருவிழா

இரு அணிகளுமே வலுவான வீரர்களைக் கொண்டவை என்பதால் இந்தப் போட்டி மீது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்களின் விருப்பப்படியே 9 நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் நெர்ஜுஸ் முதல் கோலை அடித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மும்பை தரப்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது.

அதன்பின் ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளும் இரண்டாம் கோலை அடிக்காததால் போட்டி டையில் முடிவடைந்தது.

மும்பை சிட்டி அணி தொடர்ந்து முதலிடம் – எப்படி? ISL கால்பந்து திருவிழா

ஆக்ரோஷமான வீரர்களின் சாமார்த்தியமான ஆட்டத் திறனால் மும்பை சிட்டி அணி எப்போதுமே முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்கிறது. இப்போதைய பாயிண்ட் டேபிள் நிலவரப்படி, மும்பைச் சிட்டி அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று, ஒன்றில் தோற்று ஒன்றில் டையாகி 13 புள்ளிகளோடு முதல் இடத்தில் நிலைத்து நிற்கிறது.

ஜாம்ஷெட்பூர் அணியோ, 6 போட்டிகளில் ஆடி, 1-ல் மட்டுமே வென்றுள்ளது. 4 போட்டிகளை டையில் முடித்து, ஒரு போட்டியில் தோற்றும் உள்ளது. அதனால், 7 புள்ளிகளோடு 6 இடத்தில் அதாவது பாயிண்ட் பட்டியல் வரிசையில் நடுப்பதியில் நிற்கிறது. இதற்கு கீழும் மேலும் ஐந்து அணிகள் உள்ளன.