“ஊடகத்தில் நண்பராகி ,பலாத்காரத்துக்கு பலியாகி ….”உஷார்! டீனேஜ் பெண்களை குறிவைக்கும் கூட்டம் ..

 

“ஊடகத்தில் நண்பராகி ,பலாத்காரத்துக்கு பலியாகி ….”உஷார்! டீனேஜ் பெண்களை குறிவைக்கும் கூட்டம் ..

சமூக ஊடகத்தில் ஒரு 13 வயது பெண்ணுக்கு திடீர் நண்பராகி ,அவரை மதி மயக்கி ஒரு இளைஞர் கூட்டம் அவரை கடத்திக்கொண்டு போய் பலாத்காரம் செய்த சம்பவம் டீனேஜ் பெண்களின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் அக்ரிபாடாவில் ஒரு 13 வயது சிறுமி எந்நேரமும் சமூக ஊடகத்திலேயே இருப்பார் .அதில் அவர் நண்பர்களுடன் எந்நேரமும் அரட்டையடித்துக்கொண்டிருப்பார் .அப்போது ஊடகத்தில் ஒரு இளைஞர் புதிதாக அவருக்கு நண்பரானார்.அவரின் பேச்சால் மதிமயங்கிய அந்த டீனேஜ் பெண் எந்நேரமும் அவரோடு ஊடகத்தில் அரட்டையடித்துக்கொண்டிருந்தார் .

“ஊடகத்தில் நண்பராகி ,பலாத்காரத்துக்கு பலியாகி ….”உஷார்! டீனேஜ் பெண்களை குறிவைக்கும் கூட்டம் ..இந்நிலையில் அந்த நபர் அந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்பி ஒரு இடத்திற்கு வரச்சொன்னார் ,அவரின் பேச்சை நம்பிய அந்த பெண், அவர் சொன்ன இடத்திற்கு சென்றார் .அப்போது அங்கு காத்திருந்த அவரும் அவருடைய நணபர்கள் கூட்டமும் அந்த சிறுமியை கடத்திக்கொண்டு போய் பலாத்காரம் செய்துள்ளனர் .
ஒரு வாரமாக மகளை காணாத அவரின் பெற்றோர் ஜூலை 1ம் தேதி போலீசில் புகார் தந்தனர் .போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ,அந்த பெண்ணின் ஊடக நண்பர்கள் கொடுத்த உதவி குறிப்பின் உதவியால் 2 இடங்களில் சோதனைகள் நடத்தினர்.

“ஊடகத்தில் நண்பராகி ,பலாத்காரத்துக்கு பலியாகி ….”உஷார்! டீனேஜ் பெண்களை குறிவைக்கும் கூட்டம் ..காவல்துறையினர் அந்த உதவிக்குறிப்புடன் துரிதமாக செயல்பட்டு, ராஜஸ்தானின் ஜல்வாட் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜ்கர் ஆகிய பகுதிகளுக்கு போலீஸ் குழுக்களை அனுப்பினர். இரு இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காவல்துறையினர் அங்கு அந்த பெண்ணை கடத்தி வைத்திருந்த 5 பேரை கைது செய்து 13 வயது சிறுமியை மீட்டனர்.

“ஊடகத்தில் நண்பராகி ,பலாத்காரத்துக்கு பலியாகி ….”உஷார்! டீனேஜ் பெண்களை குறிவைக்கும் கூட்டம் ..குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.