“முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி” : முதல்வர் பழனிசாமி கண்டனம்!

“முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி”  : முதல்வர் பழனிசாமி  கண்டனம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதற்கு முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி”  : முதல்வர் பழனிசாமி  கண்டனம்!

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி”  : முதல்வர் பழனிசாமி  கண்டனம்!

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை நினைவாக 2019ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலை. அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூணை இலங்கை அரசின் உத்தரவின் படி இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.