முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் : முதல்வர் இன்று அடிக்கல்!

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் :  முதல்வர் இன்று அடிக்கல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக முதல்வர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் :  முதல்வர் இன்று அடிக்கல்!

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர், 7,557 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அத்துடன் சிறு, குறு , நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடனும் முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் :  முதல்வர் இன்று அடிக்கல்!

இதனிடையே சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு 1,295 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரை மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். இதன் மூலம் மதுரைக்கு குடிநீர் பிரச்சினை என்பது இருக்காது என்று தெரிகிறது.