அதிகரிக்கும் நீர்மட்டம்: முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு!

 

அதிகரிக்கும் நீர்மட்டம்: முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு!

கேரள எல்லையில் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி 136 அடி தான் அதிகபட்சம் கொள்ளளவு என கேரள அரசு தெரிவித்தது. அதன் படி 136 அடி தான் அணையின் முழுக்கொள்ளளவாக வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதே போல கர்நாடக அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிகளவில் நீர் திறப்பு இருந்ததால், பிலிகுண்டலுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

அதிகரிக்கும் நீர்மட்டம்: முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு!

அந்த வகையில் தற்போது முல்லை பெரியாறு அணையும் 137 அடியை எட்டியுள்ளது. 136 அடி தான் முழுக்கொள்ளளவாக இருக்கும் நிலையில் தற்போது நீர்மத்தால் அதை விட அதிகமாகி இருக்கிறது. அதனால் தற்போது முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருவது குறித்து துணை கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. மத்திய நீர்வள ஆணையம் தலைமையிலான அந்த கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து தமிழக மற்றும் கேரளா அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.