• February
    24
    Monday

Main Area

Main



எங்கே அந்த இன்னொரு சிடி? முகிலனை தூங்கவிடாமல் டார்ச்சர் செய்யும் காவல்துறை!

Poongodi
Poongodi

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் தன்னை கைது செய்துள்ள காவல்துறையே தன்னை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும், 4 நாட்களாக காவலர்கள் தூங்கவிடாமல் சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உண்மைகளை வெளிவர விடாமல் காவல்துறை தடுப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கிடையில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட முகிலனை பேட்டி எடுக்க வந்த செய்தியாளர்களை 100 மீட்டர் முன்னதாகவே, தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் - செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Mukilan

முகிலன் மனைவி பூங்கொடி மற்றும் சமூக ஆர்வலர்கள் முகிலனை மீட்க பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூங்கொடி, 'தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் திட்டமிட்டு தன் கணவரை பழிவாங்குவதாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மற்றொரு சி.டி. தங்களிடம் இருப்பதாகவும், அதனை கைப்பற்றுவதற்காகவே முகிலன் கடத்தப்பட்டதாகவும், அந்த ஆதாரம் வெளியானால் அரசுக்கு பிரச்னை வரும்' எனவும் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.