பாப்ரி சாட் அலர்ஜின்னா மீன் குழம்பு சாப்பிடுங்க.. ஆனால் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்றாதீங்க.. பா.ஜ.க. அமைச்சர்

பாப்ரி சாட் அலர்ஜின்னா மீன் குழம்பு சாப்பிடுங்க.. ஆனால் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்றாதீங்க.. பா.ஜ.க. அமைச்சர்

பாப்ரி சாட் அலர்ஜின்னா மீன் குழம்பு சாப்பிடுங்க ஆனால் நாடாளுமன்றததை மீன் சந்தையாக மாற்றாதீங்க என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 10 தினங்களிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அவையை முடக்கின. இருப்பினும் அவை நடந்த சில மணி நேரங்களில் 12 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பெரிய அளவில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றியதை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

பாப்ரி சாட் அலர்ஜின்னா மீன் குழம்பு சாப்பிடுங்க.. ஆனால் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்றாதீங்க.. பா.ஜ.க. அமைச்சர்
டெரெக் ஓ பிரையன்

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் டெரெக் ஓ பிரையன் டிவிட்டரில், மோடி-ஷா விரைவாக 12 மசோதாக்களை சராசரியாக ஒரு மசோதாவை ஏழு நிமிடங்களுக்குள் நிறைவேற்றினார்கள். சட்டங்களை நிறைவேற்றுவது அல்லது பாப்ரி சாட் செய்வது! என்று பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன் மசோதாக்கள் எவ்வளவு நேரத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பான புள்ளிவிவரத்தை அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

பாப்ரி சாட் அலர்ஜின்னா மீன் குழம்பு சாப்பிடுங்க.. ஆனால் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்றாதீங்க.. பா.ஜ.க. அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி

தற்போது இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கையிலெடுத்துள்ளார். இது தொடர்பாக நக்வி கூறுகையில், அவருக்கு (டெரெக் ஓ பிரையன்) பாப்ரி சாட் ஒவ்வாமை இருந்தால், அவர் மீன் குழம்பை சாப்பிடலாம். ஆனால் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்றாதீர்கள். துரதிருஷ்டவசமாக, நாடாளுமன்றத்தின் கவுரவத்தை கெடுக்கும் வகையில் சதித்திட்டத்துடன் வேலை செய்யப்படும் முறையை இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.