காங்கிரசால் தனது கட்சியை கையாள முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை உருவாக்குகிறது.. முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கு

காங்கிரசால் தனது கட்சியை கையாள முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை உருவாக்குகிறது.. முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கு

காங்கிரசால் தனது சொந்த கட்சியை கையாள முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தின் அவைகளில் குழப்பத்தை உருவாக்குகிறது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையால் நாடாளுமன்ற அவைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்துவதில் காங்கிரஸ் தடையாக உள்ளது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரசால் தனது கட்சியை கையாள முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை உருவாக்குகிறது.. முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கு
முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: காங்கிரசால் தனது சொந்த கட்சியை கையாள முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தின் அவைகளில் குழப்பத்தை உருவாக்குகிறது. இன்று பெரும்பாலான கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நல்ல விவாதம் மற்றும் கலந்துரையாடலுடன் சுமூகமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றன.

காங்கிரசால் தனது கட்சியை கையாள முடியவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை உருவாக்குகிறது.. முக்தர் அப்பாஸ் நக்வி தாக்கு
நாடாளுமன்றம்

ஆனால் காங்கிரஸ் கட்சி தனது எதிர்மறையான முடிவை அந்த கட்சிகள் மீது சுமத்துவதன் மூலம் அவற்றை கையாளுகிறது. அவர்கள் எந்தவொரு பிரச்சினையோ அல்லது விவாதிக்க வேண்டிய விஷயமோ இல்லாமல் எதிர்க்கட்சி தலைவராக மாற விரும்புகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசவும், விவாதிக்கவும், ஆலோசிக்கவும் மற்றும் முடிவு செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். அரசாங்கம் எதை பற்றியும் பேச ஒருபோதும் மறுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.