2020ன் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி முதலிடம் !

 

2020ன் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி முதலிடம் !

”கொரோனா காலத்திலும் கோடிகளில் கல்லா கட்டி சாதனை”

2020ம் ஆண்டிற்கான முதல் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 13வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

2020ன் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி முதலிடம் !

ஆண்டுதோறும் முதல் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இந்த இடத்தை மனுஷன் 13 வருஷமா கெட்டியா பிடிச்சிட்டுருக்காரு..

2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் தொழில்துறை முடங்கி, லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவித்து வரும் சூழ்நிலையிலும் பல இந்திய பணக்காரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிச்சு சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்திருக்காங்கன்னு தெரியவருது.. இத இன்னும் கொஞ்சம் டீடெய்லா பார்ப்போமா…?

2020ன் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி முதலிடம் !

அதாவது என்னன்னா.. 2020ம் ஆண்டு, முதல் 100 இந்திய பணக்கார ர்கள் பட்டியல்ல பாதிக்கும் மேற்பட்டவர்கள், கொரோனா காலத்திலும் நல்லா கல்லா கட்டியவர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிச்சிருக்கு !? பார்த்தீங்களா பாஸ்.. எப்படி டெவலப் ஆகிட்டு போறாங்கன்னு ?

இதில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஆண்டு, 3 ஆயிரத்து 730 கோடி டாலர் (37.3 பில்லியன் டாலர்) உயர்ந்து 8 ஆயிரத்து 870 கோடி டாலராக (88.7 பில்லியன் டாலர்) அதிகரிச்சிருக்காம். அதாவது மனுஷன் இந்த ஆண்டு மட்டும் தன்னோட சொத்து மதிப்பை 73 சதவீதம் உயர்த்திக்கிட்டிருக்காருன்னு சொல்லுது ஃபோர்ப்ஸ் !

2020ன் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி முதலிடம் !

சரி இரண்டாவது இடத்துல யாருன்னு பார்த்தா அதானி குழும தலைவர் கவுதம் அதானி. இவரும் லேசுபட்ட ஆள் இல்லீங்க.. கொரோனா தொற்று பரலால் நாடே கதிகலங்கி நிற்கும் இந்த ஆண்டில் இவர் சொத்து மதிப்பு 61 சதவீதம் உயர்ந்து 2 ஆயிரத்து 520 கோடி டாலராக ( 25.2 பில்லியன் டாலர்) அதிகரிச்சிருக்குன்னா பார்த்துக்கோங்களேன். கேட்டவுடனே தலை லைட்டா கிர்ருன்னு சுத்துமே..?

சரி மூணாவது இடத்துல யாருன்னு பார்த்தா.. அட நம்ம ஆளு.. தமிழன் தான். இவர தெரியாம யாரும் இருக்க முடியாது.. எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் தொழில்துறை ஜாம்பவான் ஷிவ் நாடார். இவரும் இந்த ஆண்டு சிறப்பா கல்லா கட்டி சொத்து மதிப்பை 2 ஆயிரத்து 40 கோடி டாலராக ( 20.4 பில்லியன் டாலர்) உயர்த்திக்கிட்டிருக்காரு. அதாவது கடந்த ஆண்டு பட்டியலை ஒப்பிட்டு பார்த்தா, கிட்டத்தட்ட 600 கோடி டாலர் சம்பாதிச்சிருக்காருன்னு தெரியுது. அது மட்டுமில்ல.. போன வருஷம் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்துல இருந்த ஷிவ் நாடார், 3 இடம் உயர்ந்து 3வது இடத்தை கப்புன்னு பிடிச்சிட்டுக்காருன்னா பார்த்துக்கோங்களேன்.. இதுக்கே டயர்டா ஆகிட்டா எப்படி? இன்னும் இருக்கு.. வாங்க..

2020ன் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி முதலிடம் !

இவர்களை தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் தமானி 1540 கோடி டாலர் சொத்துடன் 4வது இடத்திலும், இந்துஜா பிரதர்ஸ் 1280 கோடி டாலர் சொத்துடன் 5வது இடத்திலும், சைரஸ் பூனாவாலா 1150 கோடி டாலர் சொத்துடன் 6வது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து பலூன்ஜி மிஸ்ட்ரி 1140 கோடி டாலர் சொத்துடன் 7வது இடத்திலும், உதய் கோடக் 1130 கோடி டாலர் சொத்து மதிப்புடனும் 8வது இடத்திலும் , லட்சுமி மிட்டல் 1030 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்திலும், திலிப் சங்வி 950 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 10வது இடத்திலும் உள்ளனராம்..

  • எஸ். முத்துக்குமார்