அடுத்த ஆண்டில் 5ஜி போன் – முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு!

 

அடுத்த ஆண்டில் 5ஜி போன் – முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் அடுத்த ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5 ஜி போன் அறிமுகம் செய்ய உள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், 5ஜி புரட்சியில் இந்தியா விரைவில் இணையும் என்று தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43 வது ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கு முயற்சிகளை ஜியோ மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த ஆண்டில் 5ஜி சேவையை அளிக்க ஜியோ முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் 5ஜி போன் – முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு இறுதியில், இந்தியா 5ஜி தொழில்நுட்ப சேவைகளில் இணையும் என்று கூறியதுடன், அதற்கான வேலைகளை ஜியோ செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கான தொலைதொடர்பு வசதி, மென்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்தியாவில் தற்போது 30 கோடி இணைப்புகள் 2ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றன. அவர்களை அடுத்தகட்ட தொழில்நுட்பத்திற்கு மாற்ற வேண்டுமெனில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பாக இருக்கும் என்றும் அம்பானி கூறினார்.

அடுத்த ஆண்டில் 5ஜி போன் – முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு!

செல்போன் இணைப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பு தொழில் நுட்பங்களில் இந்தியா ஈடுபட வேண்டும். குறிப்பாக சிப் போன்ற வன்பொருட்கள் தயாரிப்பிலும் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும்.
நமது மென்பொருள்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், வன்பொருட்கள் தொழில்நுட்பங்களிலும் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி போன்கள் ஜனவரி மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. shalni