• April
    02
    Thursday

Main Area

Main



ராமர் கோயில் கட்ட மோடியிடம் தங்க செங்கல் கொடுக்கவுள்ள முகலாய இளவரசர்!

யாகூப் ஹபிபுதீன் டுக்கி
யாகூப் ஹபிபுதீன் டுக்கி

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்டமாக நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது.

ayodhya

அதில், 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிமன்றம் அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் கோவில் கட்டுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று  கூறியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

gold

இந்நிலையில் இதுகுறித்து முகலாய அரச பரம்பரையைச் சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபுதீன் டுக்கி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும். இந்த மூலம் சகோதரத்துவத்திற்கு உதாரணமாகத்  திகழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

mughal

மேலும் ராமர் கோயிலுக்காகத் தங்கத்தால் ஆன ஒரு செங்கல்லை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர் முகலாய அரச வம்சத்தில் கடைசியாக ஆண்ட பகதூர் ஷா ஜாஃபரின் வாரிசு என்று கூறப்படுகிறது.  
 

2018 TopTamilNews. All rights reserved.