• August
    24
    Saturday

Main Area

Main



அபியை நாற்காலி தூக்கி அடிக்க சென்ற முகின்: வனிதாவின் நாரதர் வேலையால் வெடித்த புது பூகம்பம்! 

பிக் பாஸ்
பிக் பாஸ்
Loading...

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 51 நாட்களை எட்டியுள்ளது.  16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை 7பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் முகின் ராவ், அபிராமி, கவின், லாஸ்லியா மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். 

இந்த வார luxury பட்ஜெட் டாஸ்க்காக விருந்தாளியாக மீண்டும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வந்த உடனே அடுத்தவர்களைக் குறை சொல்வது, அதிகாரமாகக் கேள்வி கேட்பது என்று பழையபடி தனது அராஜகத்தை ஆரம்பித்துவிட்டார். 

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் வனிதா, முகனை பற்றி தேவையில்லாமல் இல்லாததை எல்லாம் சொல்லி அபியை பிரெய்ன்வாஷ் செய்துள்ளார். தற்போது அதைத்தொடர்ந்து அந்த விஷயம் குறித்து அபி, முகனிடம் கேட்டு சண்டை போடுவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. 

bb

அதில் முகன், 'நேற்று இருந்த அபிராமி வேற இப்போ இருக்க அபிராமி வேற' என்று சொல்ல உடனே அபி, 'நான் உங்கிட்ட அந்த அர்த்தத்தில் தான் செய்தேனா, சொல்லு டா.. சொல்லு டா..' என்று கத்தி கொண்டே இருக்க முகன் கோபத்தில் அவரை நாற்காலி தூக்கி அடிக்க சென்றுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் வனிதாவின்  நாரதர் வேலையால் இது போன்று ஒரு புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது என்று கமெண்ட் செய்துள்ளனர். 

ஒரு சிலரோ வேண்டும் என்றே முகனின் கோபத்தை trigger செய்து அவரை வெளியேற்ற பிக் பாஸ் பிளான் செய்வதாக கூறுகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.