#Mudukulathur யாரு வந்து என்ன செஞ்சாங்க? தேர்தலையே புறக்கணிக்க போறோம்!

 

#Mudukulathur யாரு வந்து என்ன செஞ்சாங்க? தேர்தலையே புறக்கணிக்க போறோம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் அனல்பறந்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக ஆகிய மாபெரும் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அதே போல, மூன்றாவது அணியாக உருவெடுத்திருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

#Mudukulathur யாரு வந்து என்ன செஞ்சாங்க? தேர்தலையே புறக்கணிக்க போறோம்!

ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுகவா? திமுகவா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் அதிகரித்திருக்கிறது. தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொன்னாலும் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல், 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்துவதற்கான பணியை தொடங்கியிருக்கிறோம். அந்த வகையில் ‘முதுகுளத்தூர்’ தொகுதி மக்கள் தேர்தல் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்…

#Mudukulathur யாரு வந்து என்ன செஞ்சாங்க? தேர்தலையே புறக்கணிக்க போறோம்!

பல்வேறு கட்சிகள் வென்ற ‘முதுகுளத்தூர்’:

கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பாலகிருஷ்ணனும், 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பாலகிருஷ்ணனும், 2001ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பதினெட்டாம்படியானும், 2006ம் ஆண்டு திமுக வேட்பாளர் முருகவேலும், 2011ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் முருகனும், 2016ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் பாண்டியும் வெற்றி வாகையை சூடினர். இப்படியாக அதிமுக, திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாறி மாறி இந்த தொகுதியில் ஆட்சி புரிந்துள்ளன.

#Mudukulathur யாரு வந்து என்ன செஞ்சாங்க? தேர்தலையே புறக்கணிக்க போறோம்!

#TTNsurvey ஆளப்போவது யார்?

கடந்த 6 முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் 4 கட்சிகள் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் சூழலில், இந்த முறை யார் வெற்றி பெறுவார்? யாருக்கு உங்கள் வாக்கு? என எமது செய்தியாளர் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார். அதன் முடிவில், பெரும்பாலானோர் அதிமுக மற்றும் திமுக மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். அடிப்படை தேவைகளை அரசியல் கட்சிகள் பூர்த்தி செய்யவில்லை என்பதால் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என அத்தொகுதி மக்கள் தெரிவித்தனர். புறவழிச்சாலை மேம்படுத்துதல், விலை வாசி உயர்வு போன்றவையே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதிமுக, திமுகவுக்கு அடுத்த படியாக எந்த மூன்றாவது கட்சி இருக்கும்? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, சிலர் சீமான் பெயரையும் ஒரு சிலர் தினகரன் பெயரையும் சொன்னார்கள். கமல்ஹாசன் பெயர் இங்கு அடிபடவில்லை. இதையடுத்து, தற்போது இருக்கும் ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பலர் பூச்சியம் என்று தான் சொன்னார்கள். ஒரு சிலர் தான் 10க்கு 5 முதல் 7 மதிப்பெண்களை சொன்னார்கள்.

#Mudukulathur யாரு வந்து என்ன செஞ்சாங்க? தேர்தலையே புறக்கணிக்க போறோம்!

சர்வேயின் முடிவில், மக்களின் கருத்து படி வெற்றி வாய்ப்பு திமுக அதிகமாக இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக அதிமுகவுக்கும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

களம் காணும் வேட்பாளர்கள்:

திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியிருக்கிறது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக சார்பில் கீர்த்திகா முனியசாமி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதை தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் இங்கு களம் காணுகின்றனர்.

முதுகுளத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் இதுவரை எந்த கட்சியும் நிலையாக ஜெயித்ததில்லை. இந்த சர்வேயின் முடிவில் மக்கள் பெரும்பாலானோர் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தான் வெல்லும் என சொல்கிறார்கள். மக்களின் என்ன ஓட்டம் தேர்தலில் பிரதிபலிக்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!