• December
    09
    Monday

Main Area

Main



100 ரூபாய்க்காக கூலி தொழிலாளி வெட்டிக்கொலை!

Murder
Murder

நூறு ரூபாய்காக கூலி தொழிலாளி ஒருவர், அவரது மனைவி கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் மற்றும் வடபாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இருவரும் கோயில்களில் திருஷ்டி மற்றும் தோஷம் கழிக்க பயன்படும் கருடன்-கிழங்கு பறித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  இருவரும் மலையனூர் ஏரி பகுதிகளில் இந்த கருடன் கிழங்கை பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று ஏரியில் பறித்த கிழங்கை பகிர்ந்து கொள்ளும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனசேகர் அருகில் இருந்த கற்களை எடுத்து முருகேசனை தாக்கியுள்ளார். உடனே தனசேகரை முருகேசனின் மனைவி தடுத்துள்ளார். ஆனால் தனசேகர் வீசிய கள் முருகேசன் தலையில் பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனசேகரனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

Murderவிசாரணையில் கருடன் கிழங்கை இருவரும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பறித்து விற்று அதில் வரும் வருமானத்தை பிரித்து கொள்வதும், இதில் நூறு ரூபாய் பணத்தை தன்னிடம் தராமல் முருகேசன் அலைகழித்து வந்ததால் கொலை செய்தேன் என்றும் தனசேகரன் வாக்கு மூலம் அளித்துள்ளார். 100 ரூபாய்க்காக கொலை அரங்கேறிய இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.