கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் பலி!

 

கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் பலி!

கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் பலி விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் பலி!

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால் கண்ணை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது .குறிப்பாக சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு குறைவாக காணப்படும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் இந்த நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் எழும்பூர் கண் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் பலி!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி ஒருவர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்துள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இவரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கியதாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் பலி விழுந்துள்ளது.