நஷ்டம்தான்.. ஆனால் முன்னை காட்டிலும் கம்மி.. தொடர்ந்து நஷ்டத்தை காட்டும் அரசு நிறுவனம் எம்.டி.என்.எல்.

நஷ்டம்தான்.. ஆனால் முன்னை காட்டிலும் கம்மி.. தொடர்ந்து நஷ்டத்தை காட்டும் அரசு நிறுவனம் எம்.டி.என்.எல்.

எம்.டி.என்.எல். நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.582.25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மும்பை மற்றும் டெல்லி ஆகிய மெட்ரோ நகரங்களில் தொலைத்தொடர்பு சேவை அளித்தும் வரும் பொதுத்துறை நிறுவனம் எம்.டி.என்.எல்.. இந்நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். எம்.டி.என்.எல். நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் அந்த காலாண்டில் அந்நிறுவனம் நஷ்டத்தை கணக்கு காட்டியுள்ளது.

நஷ்டம்தான்.. ஆனால் முன்னை காட்டிலும் கம்மி.. தொடர்ந்து நஷ்டத்தை காட்டும் அரசு நிறுவனம் எம்.டி.என்.எல்.
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்.

எம்.டி.என்.எல். நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.582.25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனம் ரூ.950 கோடியை நஷ்டமாக சந்தித்து இருந்தது. 2020 ஜூன் காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.639.10 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

நஷ்டம்தான்.. ஆனால் முன்னை காட்டிலும் கம்மி.. தொடர்ந்து நஷ்டத்தை காட்டும் அரசு நிறுவனம் எம்.டி.என்.எல்.
எம்.டி.என்.எல்.

2020 செப்டம்பர் காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.342.20 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் வருவாய் ரூ.385.5 கோடியாக இருந்தது.