“தோனி உடனடி ஆலோசகர்…விராட் கோலி சிறந்த ஊக்கப்படுத்துபவர்” – குல்தீப் யாதவ் ஓபன் டாக்

 

“தோனி உடனடி ஆலோசகர்…விராட் கோலி சிறந்த ஊக்கப்படுத்துபவர்” – குல்தீப் யாதவ் ஓபன் டாக்

மகேந்திர சிங் தோனி ஒரு உடனடி ஆலோசகர் மற்றும் ஊக்கம் தருவதில் விராட் கோலி சிறந்தவர் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனியிடமிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து, தோனியின் செயல்பாடுகளுடன் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஒப்பிடப்படுகிறார். இந்தநிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அளித்துள்ள பேட்டியில் தோனி மற்றும் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.

“தோனி உடனடி ஆலோசகர்…விராட் கோலி சிறந்த ஊக்கப்படுத்துபவர்” – குல்தீப் யாதவ் ஓபன் டாக்

“இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் மைதானத்திலும், வெளியிடங்களிலும் விராட் கோலி ஊக்கம் தரும் விதமாக ஆதரிப்பார். அந்தவகையில் விராட் கோலி களத்திலும் மற்றும் வெளியேயும் என்னை நிறைய ஆதரித்துள்ளார். போட்டியின் கடினமான சூழ்நிலைகளிலும் அவர் என்னை ஆதரிக்கிறார். ஒரு பந்து வீச்சாளர் எப்படி உணருகிறார் என்பதை விராட் கோலி நன்கு அறிந்தவர்.

அவர் உங்களிடம் வந்து எங்கு பந்து வீச வேண்டும் என்று வழிகாட்டுவார். முதுகில் தட்டிக் கொடுத்து வழிகாட்டுதல்களை சொல்லி தீர்வைக் கொடுப்பார். இதனால் விக்கெட் எடுக்க அவர் பந்துவீச்சாளருக்கு உதவுகிறார். அதேசமயம் கிரிக்கெட் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது உடனடியாக ஆலோசனை தருவதில் தோனி வல்லவர். அதேபோல வீரர்களுக்கு ஊக்கம் தருவதில் விராட் கோலி சிறந்தவர்” என்று குல்தீப் யாதவ் கூறினார்.