ஸ்டாலின் உடனான ஆலோசனையில் சொல்லப்பட்டது என்ன? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ஸ்டாலின் உடனான ஆலோசனையில் சொல்லப்பட்டது என்ன?  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னையில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஸ்டாலின் உடனான ஆலோசனையில் சொல்லப்பட்டது என்ன?  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

முழு ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. காய்கறிகள் உள்ளிட்டவை தடையின்றி மக்களுக்கு கிடைக்க தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம. ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலாளர் கோபால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஸ்டாலின் உடனான ஆலோசனையில் சொல்லப்பட்டது என்ன?  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4900 மெட்ரிக் டன் காய்கறி பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அத்துடன் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் தமிழகத்தில் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காய்கறிகள், பழங்களின் விலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.