3 மாசத்துல ரூ.679 கோடி…. ஒரு வருஷத்துல ரூ.1,422 கோடி… லாபம் பார்த்த எம்.ஆர்.எப்….

3 மாசத்துல ரூ.679 கோடி…. ஒரு வருஷத்துல ரூ.1,422 கோடி… லாபம் பார்த்த எம்.ஆர்.எப்….

வாகன டயர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எம்.ஆர்.எப். நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.679.02 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாகும். அந்த காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனம் நிகர லாபமாக ரூ.293.93 கோடி ஈட்டியிருந்தது.

3 மாசத்துல ரூ.679 கோடி…. ஒரு வருஷத்துல ரூ.1,422 கோடி… லாபம் பார்த்த எம்.ஆர்.எப்….

2020 மார்ச் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,685.16 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,137.67 கோடியாக உயர்ந்து இருந்தது. எம்.ஆர்.எப். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.94 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

3 மாசத்துல ரூ.679 கோடி…. ஒரு வருஷத்துல ரூ.1,422 கோடி… லாபம் பார்த்த எம்.ஆர்.எப்….

2019-20 முழு நிதியாண்டில் (2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை), எம்.ஆர்.எப். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,422.57 கோடி ஈட்டியுள்ளது. இதே நிதியாண்டில் இந்றுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.16,239.36 கோடியாக உயர்ந்துள்ளது.