எம்.ஆர்.எப். நிகர லாபம் ரூ.332 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.94 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

 

எம்.ஆர்.எப். நிகர லாபம் ரூ.332 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.94 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

எம்.ஆர்.எப். நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.332 கோடி ஈட்டியுள்ளது.

வாகன டயர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எம்.ஆர்.எப். நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.332 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 51 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனம் நிகர லாபமாக ரூ.679.02 கோடி ஈட்டியிருந்தது.

எம்.ஆர்.எப். நிகர லாபம் ரூ.332 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.94 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
எம்.ஆர்.எப்.

2020 மார்ச் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,816 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,685.16 கோடியாக இருந்தது. எம்.ஆர்.எப். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2020-21ம் நிதியாண்டுக்கு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.94 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

எம்.ஆர்.எப். நிகர லாபம் ரூ.332 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.94 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
எம்.ஆர்.எப்.

2020-21 முழு நிதியாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,277 கோடியும், செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.16,163 கோடியும் ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது எம்.ஆர்.எப். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.18 சதவீதம் சரிந்து ரூ.81,416.20ஆக குறைந்தது.