கொரோனா நிவாரணம்: ரூ.25 லட்சம் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த்

 

கொரோனா நிவாரணம்: ரூ.25 லட்சம் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த்

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை என கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், கொரனோ சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பல தனியார் நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Vijay Vasanth - Wikipedia

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ₹25 லட்சம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்துக்கு சென்ற அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை அளித்தார். இதேபோல் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் சார்பில் ₹1 கோடி நிதி வழங்கப்பட்டது.