ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கொடுத்த ‘அந்த நூல்’ ; மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்கும் சு.வெங்கடேசன்!

ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கொடுத்த ‘அந்த நூல்’ ; மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்கும் சு.வெங்கடேசன்!

முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு மதுரையை பற்றிய புத்தகத்தை கொடுத்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரை சந்தித்த முதல்வர், சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படுத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தமிழகத்தில் பிரச்னைகள் குறித்தும் பேசினார்.

ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கொடுத்த ‘அந்த நூல்’ ; மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்கும் சு.வெங்கடேசன்!

இந்த சந்திப்பின்போது முதல்வர் மு.க ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு The Multiple Facets of My Madurai என்னும் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அது என்னும் மதுரையை பற்றிய புத்தகம். ஜனாதிபதிக்கு மதுரையை பற்றிய புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியது மதுரை மக்களை பேரானந்தம் அடையச் செய்தது.

ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கொடுத்த ‘அந்த நூல்’ ; மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்கும் சு.வெங்கடேசன்!

இந்த நிலையில், மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி வேறில்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று ராஷ்டிர பவனில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மனோகர் தேவதாஸின் நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளார். மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்? மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம் என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.