எடப்பாடியாரே.. நோட்டீஸில் மோடி போட்டோ எங்கே? – கிண்டலடித்த எம்.பி வெங்கடேசன்!

 

எடப்பாடியாரே.. நோட்டீஸில் மோடி போட்டோ எங்கே? – கிண்டலடித்த எம்.பி வெங்கடேசன்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. 234 தொகுதிகளிலும் பிரச்சாரங்கள் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. மக்களின் வாக்குகளை கவர, அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் முன்வைத்திருக்கிறார்கள். தங்களது வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடியாரே.. நோட்டீஸில் மோடி போட்டோ எங்கே? – கிண்டலடித்த எம்.பி வெங்கடேசன்!

அந்த வகையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்திருக்கிறார். அதில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் படங்களுடன் அதிமுக வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் போட்டோவோ, பெயரோ குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில், பாஜக தலைவர் மோடி புகைப்படம் நோட்டீஸில் இடம்பெறாததை விமர்சித்து மதுரை எம்.பி.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மாண்புமிகு எடப்பாடியாரே! உங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மோடியின் படத்தை போடாமல், BJP யின் பெயரைக்கூடப் போடாமல் துண்டறிக்கைகள் அடித்து வாக்கு கேட்கிறார்கள். இது என்ன வகை கூட்டணி தர்மம்? மோடியின் படத்தை பயண்படுத்தச்சொல்லுங்கள். பிளீஸ்! எனக் குறிப்பிட்டுள்ளார்.