ஒரு மளிகை கடைக்கு பிஸ்கட் வாங்க சென்ற 13 வயதான சிறுமியை அந்த கடைக்காரர் பலாத்காரம் செய்து அவரின் மனைவியோடு சேர்ந்து கொலை செய்தார் .
![MP shopkeeper rapes 13-year-old girl, murders her with wife’s help [Representative image]](https://imgk.timesnownews.com/story/iStock-486573959_3_1_0.jpg?tr=w-600,h-450,fo-auto)
மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தின் தன்வாட் பகுதியில் ஒருவர் மளிகை கடை நடத்தி வருகிறார் .அவரின் கடைக்கு அருகிலேயே அவரின் வீடும் உள்ளது .அதனால் அவரின் மனைவியும் அவரோடு அடிக்கடி அந்த மளிகை கடைக்கு வருவார் .
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று காலையில் ஒரு13 வயதான பெண் அந்த கடைக்கு பிஸ்கட் வாங்குவதற்கு வந்தார் ,அப்போது அந்த சிறுமியை பார்த்த அந்த 45 வயதான மளிகை கடை காரருக்கு அந்த சிறுமி மீது ஆசை வந்துள்ளது .அதனால் அந்த சிறுமியை அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார் .அதை கேட்டு வர மறுத்த சிறுமியிடம், தான் வீட்டிற்கு வந்தால் அதிகமாக விலையுயர்ந்த பிஸ்க்கட்டுகளை இலவசமாக தருவதாக ஆசை காமித்தார் .அதை நம்பிய அந்த 13 வயதான பெண் அவரோடு அவரின் வீட்டிற்கு சென்றார் .அப்போது அவரின் வீட்டில் யாருமில்லாததால் அந்த பெண்ணை அவர் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அவரின் மனைவி அங்கு வந்து விடவே ,அந்த பெண் அவரிடம் நடந்ததை கூறினார் .மேலும் இந்த விஷயத்தை ஊரில் அனைவரிடமும் கூறுவதாக மிரட்டினார் .அதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை அடித்து கொலை செய்தார்கள் .பின்னர் அவரின் பிரேதத்தை வீட்டின் மாடியில் துணி காய வைப்பது போல காய வைத்துள்ளார்கள் .அப்போது சிறுமியின் பிணத்தை பார்த்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் அந்த சிறுமியின் வீட்டில் இந்த விஷயத்தினை கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஊர் மக்களை திரட்டி கொண்டு , அந்த மளிகை கடைக்காரரின் வீட்டிற்குள் புகுந்தார்கள் .அப்போது அவரின் மகள் மாடியில் பிணமாகி கிடப்பதை பார்த்து அழுது புரண்டார்கள் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ,போலீசார் அந்த மளிகை கடைக்காரரை கைது செய்தார்கள் .பின்னர் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவியை தேடி வருகிறார்கள்.
