தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ரூ.1 கோடி முறைகேடு செய்திருப்பதாக எம்.பி செந்தில்குமார் பரபரப்பு புகார்! மறுக்கும் ஆட்சியர் மலர்விழி!

 

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ரூ.1 கோடி முறைகேடு செய்திருப்பதாக எம்.பி செந்தில்குமார் பரபரப்பு புகார்! மறுக்கும் ஆட்சியர் மலர்விழி!

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி-யாக இருப்பவர் செந்தில்குமார். திமுகவைச் சேர்ந்தவர். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ரூ.1 கோடி முறைகேடு செய்திருப்பதாக எம்.பி செந்தில்குமார் பரபரப்பு புகார்! மறுக்கும் ஆட்சியர் மலர்விழி!

பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”கொரோனா தொற்று பரவத் தொடங்கிய தொடக்க காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், சாதனங்கள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்த என் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அளித்தேன்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ரூ.1 கோடி முறைகேடு செய்திருப்பதாக எம்.பி செந்தில்குமார் பரபரப்பு புகார்! மறுக்கும் ஆட்சியர் மலர்விழி!

இந்நிலையில், நடப்பு ஆண்டில் எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நாடு முழுவதுமான தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டி இருப்பதால் இந்த ஆண்டுக்கான நிதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நான் அளித்த கடித்தத்தை பயன்படுத்தி கரோனா தடுப்புப் பணிக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நிதி பெற இயலாது. ஆனால், கடந்த 2019-20ஆம் ஆண்டுக்கான எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்ட நிர்வாகம் ரூ.1 கோடியை எடுத்துக் கொண்டது. என் தொகுதியில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ள கடந்த ஆண்டில் ரூ.1 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தேன். அதை கொரோனா தடுப்புப் பணிக்கு எடுக்கப்பட்டதால் அந்தப் பணிகள் தற்போது நின்று விட்டன. அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்புப் பணி உபகரணங்கள் போன்றவை வாங்கப்பட்டுள்ளதா என்று விசாரித்தபோதும் முரண்பட்ட தகவல்களே கிடைக்கிறது. எனவே, எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  மாவட்ட நிர்வாகம் ரூ.1 கோடி நிதியை முறைகேடு செய்துள்ளதாக அறிகிறேன். இதுபற்றி விசாரணை நடத்தி கலெக்டர் மலர்விழி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு புகார் அனுப்ப இருக்கிறேன்.

சமீபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தர்மபுரி வந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிகளுக்கு எம்.பி என்ற முறையில் என்னை அழைத்திருக்க வேண்டும். ஆனால், அழைக்கப்படவில்லை. மக்கள் தேவைகளை வலியுறுத்தும் கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் அவரை பார்க்க சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திட குழு அமைக்க வலியுறுத்தி, உரிமை மீறல் விசாரணைக் குழுவிடம் புகார் அளிக்க இருக்கிறேன்’’என்று கூறினார்.

இந்த புகார்கள் அனைத்தையும் மறுத்த தர்மபுரி மாவட்ட கலெக்டர் சு.மலர்விழி, ‘’நிதியாண்டு குறிப்பிடாமல், கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.1 கோடி நிதியை எம்.பி ஒதுக்கீடு செய்தார். எனவே, அவரது நிதியில் இருந்து ரூ.1 கோடி எடுக்கப்பட்டது. இந்தத் தொகை, கலெக்டர், எஸ்.பி. டிஆர்ஓ உள்ளிட்டோர் அடங்கிய  ‘மாவட்ட பேரிடர் மேலாண் குழு’ மூலம் விவாதிக்கப்பட்ட பிறகே செலவிட முடிவு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நடவடிக்கைகள். முதல்வர் தர்மபுரி வந்தபோது அழைப்பிதழ் எதுவும் அச்சடித்து யாருக்கும் விநியோகிக்கவில்லை. எம்.பி முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவது பற்றி முன்னதாகவே கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவித்திருந்தால் அதற்கான அனுமதி பெற முயன்றிருப்போம். திடீரென வந்து அவர் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். கரோனா தொற்று பரவும் சூழலில் கரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர். இதில் எந்த விதியோ, நெறிமுறைகளோ மீறப்படவில்லை. விசாரணைக் குழு அமைக்கப்பட்டாலும் இந்த விளக்கங்களை அளிக்க தயாராக உள்ளோம்’’ என்று கூறினார்.