வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவலா?… பகீர் கிளப்பும் எம்.பி. ரவிக்குமார்!

 

வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவலா?… பகீர் கிளப்பும் எம்.பி. ரவிக்குமார்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட பன்மடங்கு அதிகமாக பரவும் இரண்டாம் அலை வைரஸ் பாதிப்பால் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, இரவு நேர ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட உள்ளது. அதே போல, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் அமலுக்கு வரவுள்ளது.

வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவலா?… பகீர் கிளப்பும் எம்.பி. ரவிக்குமார்!

இவ்வாறு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவுவதாக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், B.1.617 வகை வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளதாம்.

வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவலா?… பகீர் கிளப்பும் எம்.பி. ரவிக்குமார்!

அந்த B.1.617 வகை வைரஸை கட்டுப்படுத்த தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை விளக்குமாறு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டில் அதிகம் காணப்படுவது இருமுறை உருமாற்றம் அடைந்த கொரோனா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 60 முதல் 80 சதவீதம் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத்தில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் ரவிக்குமார், தமிழகத்தில் எத்தனை நோயாளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.