“பாஜகவில் இணையும் பாமக…எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபடும்” தேர்தலுக்குப் பிறகான காட்சிகள்

 

“பாஜகவில் இணையும் பாமக…எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபடும்”   தேர்தலுக்குப் பிறகான காட்சிகள்

தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு இபிஎஸ் – ஒபிஎஸ் பிரிவார்கள் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

“பாஜகவில் இணையும் பாமக…எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபடும்”   தேர்தலுக்குப் பிறகான காட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றுடன் அரசியல் கட்சிகளின் பரப்புரை முடிவடைந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. இந்நிலையில் மக்களவை எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தலுக்குப் பிறகான காட்சிகள் -தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்

  1. கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மநீம வில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாஜகவுக்கு செல்வார்கள்
  2. பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்
  3. இபிஎஸ் – ஒபிஎஸ் பிரிவார்கள். எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்
  4. தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா?எனத் தெளிவாக அணிபிரியும்

தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் மற்றொரு பதிவில், “தோழர்களே! சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.