“சசிகலாவை ஒட்டுமொத்த அதிமுகவும் தலைவியாக ஏற்றுக்கொள்ளும்” – எம்.பி. கார்த்தி சிதம்பரம்

“சசிகலாவை  ஒட்டுமொத்த அதிமுகவும்  தலைவியாக ஏற்றுக்கொள்ளும்” – எம்.பி. கார்த்தி சிதம்பரம்

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வர வேண்டும் என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

“சசிகலாவை  ஒட்டுமொத்த அதிமுகவும்  தலைவியாக ஏற்றுக்கொள்ளும்” – எம்.பி. கார்த்தி சிதம்பரம்

2021 சட்டப்பேரவை தேர்தல் வரு, ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சிகள் இடம்பெறும் என்பது கணிப்பு. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக கட்சி இருப்பது உறுதியாகியுள்ளது. தேமுதிக. பாமக கட்சிகளின் நிலைப்பாடு விரைவில் வெளியாகும். இந்த சூழலில் சசிகலா விடுதலையும் பரபரப்பான ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. சசிகலா விடுதலையானால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிமுக அமைச்சர்கள் கூறிவருகிறார்கள்.

“சசிகலாவை  ஒட்டுமொத்த அதிமுகவும்  தலைவியாக ஏற்றுக்கொள்ளும்” – எம்.பி. கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கார்த்தி சிதம்பரம், கமல்ஹாசனால் எம்ஜிஆர் ஆக முடியாது. தேர்தல் வரும்போது எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது இயல்பே. தனியாக இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வர வேண்டும்; ஒரே பாடலில் சினிமாவில் ஜெயிப்பது போல் அரசியலில் வெல்வது என்பது சாத்தியமற்றது. சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.