முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி – கனிமொழி ட்வீட்!

 

முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி – கனிமொழி ட்வீட்!

நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். முதல் முறையாக கொடியை ஏற்ற வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி கூறி நெகிழ்ந்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 50 ஆண்டுகளாக உழைத்த என்னை முதல்வராக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இன்றோடு பதவியேற்று 101 நாட்கள் ஆகிறது. 75வது சுதந்திர தினத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண் பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும் சதையாலும் ஆனது. முதல்வர்களுக்கு சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி. எத்தனை முதல்வர்கள் வந்தாலும் அவர்கள் கொடியேற்றுவதற்கான உரிமையை பெற்று கொடுத்தவர் கருணாநிதி தான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி – கனிமொழி ட்வீட்!

இந்த நிலையில், இந்தியாவின் முதல்வர்களுக்கு கொடியேற்றுவதற்கான உரிமையை பெற்றுத் தந்ததற்காக தனது தந்தைக்கு நன்றி தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற உரிமை பெற்றுத் தந்த மனிதருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலர்களால் மூவர்ண கொடி போல் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று தான் வணங்கிய புகைப்படத்தையும் வெளியிட்டு #RememberingKalaignar என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளார்.