ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அதிமுக பிரமுகர் முயற்சி? பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பும் கனிமொழி

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடியபோது சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிமுக  பிரமுகர் ஒருவர் காப்பாற்ற முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் சோதனை நடத்திய போது ஸ்ரீதரின் காரில் அரசியல் பிரமுகரின் ஆட்கள் இருந்ததாக பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி எம்பி கனிமொழி பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி தனது டிவிட்டர் பக்கத்தில், “‘அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள்; இதற்கு எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் கடம்பூர் ராஜுவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular

கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு!

இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவில் காணாமல் போன மக்கள் என கடந்த சில நாட்களாக துயரத்தின் உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சோக செய்தியாக வந்ததது கோழிக்கோடு விமான விபத்து. துபாயிலிருந்து...

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையும், மழையும்தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமா என்று பேசப்படுகிறது. 191...

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...