“அதிமுக அரசு எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை?” – எம்.பி. கனிமொழி

“அதிமுக அரசு எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை?” – எம்.பி. கனிமொழி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

“அதிமுக அரசு எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை?” – எம்.பி. கனிமொழி

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, இன்று கன்னியாகுமரியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ” அதிமுக அரசு எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை. முதியோர் உதவித்தொகை கொடுக்க பணமில்லை என கூறும் அரசு, விளம்பரத்துக்கு மட்டும் எப்படி செலவு செய்கிறது? தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

“அதிமுக அரசு எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை?” – எம்.பி. கனிமொழி

பசியுடன் இருக்கும் யானை கரும்பு காட்டில் செய்வது போல தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் சூறையாடி வருகிறார்கள். அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்று கூறி வரும் தமிழக முதல்வர், அடிக்கல் நாயகனாக உள்ளார். இதுவரை பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டியுள்ளார் பணிகள் நடைபெறவில்லை” என்றார்.

“அதிமுக அரசு எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை?” – எம்.பி. கனிமொழி

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு சென்ற எம்.பி. கனிமொழி, “இன்று கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவரது அறிவார்ந்த கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊக்க சக்தியாக இருப்பவை. பிரம்மாண்டமான வள்ளுவர் சிலை சரியான பராமரிப்பில்லாமல் உள்ளது.வள்ளுவரின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிலையைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அரசு அவரையும் அவமதிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.