எம்.பி கனிமொழியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாபஸ்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி இன் சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டில் தினமும் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், போலீசார் தாக்கியதால் தான் அவர்கள் உயிரிழந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டிஜிபியிடம் கனிமொழி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது கனிமொழி வீட்டுக்கு எந்த அச்சுறுத்தல் இல்லாததாலும், கொரோனா தடுப்பு பணிக்குக் காவலர்கள் தேவைப்படுவதாலும் காவலர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...