எம்.பி. ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது போலீஸ்!

 

எம்.பி. ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது போலீஸ்!

கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு ஜோதிமணி எம்.பி. போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

எம்.பி. ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது போலீஸ்!

கரூர் மாவட்டத்தில் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை இருந்து வந்தது. அதை பூங்கா அமைப்பு பணிக்காக எவ்வித அறிவிப்பும் இன்றி அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையான எதிர்ப்பை பதவி செய்தார். இதுகுறித்து அவர், “கரூரில் காந்திசிலையை இரவோடிரவாக காணவில்லை.எவ்வித அரசு ஆணை,டெண்டர் எதுவுமில்லாமல் சிலையை அப்புறப்படுத்திவிட்டு சட்டத்திற்கு புறம்பாக அவசரகதியில் பூங்கா அமைப்பு பணி நடக்கிறது. தரமற்ற பணி வேறு. அதிமுகவின் ஊழல் காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குரியது.காந்திசிலை ரவுண்டானா ஒன்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடோ அல்லது ஊழல் பணத்தில் கரூரில் அவர் வாங்கிக் குவித்திருக்கும் சொத்தோ அல்ல” என்று கூறியிருந்தார்.

எம்.பி. ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது போலீஸ்!

இந்நிலையில் கரூரில் போராடிய காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது போலீஸ். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை அகற்றப்பட்டது. அத்துடன் தரமற்ற பீடத்தில் காந்தி சிலை வைக்கப்பட்டதாக புகார் கூறி மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.