மோடி அரசின் இந்த துரோகச் செயலுக்கு தமிழக பிஜேபி தலைவர்களின் பதில் என்ன? – ஜோதிமணி எம்.பி. காட்டம்!!

 

மோடி அரசின் இந்த துரோகச் செயலுக்கு தமிழக பிஜேபி தலைவர்களின் பதில் என்ன? – ஜோதிமணி எம்.பி. காட்டம்!!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணிக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 8 ஆயிரத்து 653 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 62 , தாழ்த்தப்பட்டோர் மதிப்பெண் கட் ஆப் 62, ஓபிசி ஏழைகள் 62, பழங்குடியினர் 59.5 மற்றும் உயர் சாதி ஏழைகளுக்கு 57.75 கட்-ஆப் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. உயர்சாதி மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றால் தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் பணி அளிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் இந்த அறிவிப்பில் இருந்து வெளி வந்துள்ளது.

மோடி அரசின் இந்த துரோகச் செயலுக்கு தமிழக பிஜேபி தலைவர்களின் பதில் என்ன? – ஜோதிமணி எம்.பி. காட்டம்!!

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “மோடி அரசு தொடர்ந்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. சமூகம்,பொருளாதாரம் எனும் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளவர்களின் கட் ஆப் மார்க் எப்படி உயர்சாதியினரை விட அதிகமாக இருக்கமுடியும்?

பிறகெப்படி இந்த சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? இடஒதுக்கீடு என்பதே நூற்றாண்டுகளாக நடதுவரும் சமூக அநீதியை சரிசெய்ய ,வழங்கப்படும் சமூக நீதி. சமூக நீதிக்கு எதிரான துரோகத்தை ஆர் எஸ் எஸ்/பாஜக மோடி அரசு செய்துவருகிறது.இது மன்னிக்க முடியாத துரோகம். இந்துக்கள் இந்துக்கள் என்று பேசும் ஆர் எஸ் எஸ்/ பிஜேபி எப்படி இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ளவர்களுக்கு துரோகம் செய்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.

இந்து அரசியல் என்பது வெறும் ஏமாற்றுவேலை. இப்படியே போனால் பெரும்பானமை இந்துக்கள் வேலைவாய்ப்பில்லாமல் தெருவில் தான் நிற்கவேண்டும்.பிஜேபியில் உள்ள பிறபடுத்தப்பட்ட,தலித் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் பதவிக்காகவும்,சுயநலத்திற்காகவும் இந்த துரோகத்திற்கு துணை நிற்கிறார்கள். மோடி அரசின் இந்த துரோகச் செயலுக்கு தமிழக பிஜேபி தலைவர்களின் பதில் என்ன?” என்று பதிவிட்டுள்ளார்.