கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் கன்னியாகுமரி தொகுதி எம்பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான வசந்தகுமார்(70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா ஏற்பட்டு இருந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.