பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம்.. மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம்.. மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் அமிர்தசரஸ் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்த்தார்பூர் பாதை திறக்கப்பட்டவுடன், இரு தரப்பு உறவுகளை வேறு கோணத்தில் பார்க்கும் வாய்ப்பு வெளிப்பட்டது. பஞ்சாப் வழியாக இயங்கும் வர்த்தக பாதையை பலப்படுத்த இந்தியா-பாகிஸ்தான் உறவின் மையமாக மையமாக பஞ்சாப்பை உருவாக்க முடியுமா என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம்.. மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.
எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா

இது நம் நாட்டின் பஞ்சாபில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை பாகிஸ்தான் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கும். இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆண்டு வர்த்தகம் 250 கோடி டாலராக குறைந்துள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி அது 3700 கோடி டாலராக இருக்க சாத்தியம்.

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம்.. மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.
டிரக்குகளில் பாகிஸ்தானுக்கு செல்லும் சரக்குகள்

பிராந்திய வேளாண்மை மற்றும் பொருளாதார புத்துணர்ச்சிக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்குவதற்காக, வர்த்தகத்தை தொடங்குவதற்காக தூதரக நடைமுறைகளை தொடங்கவும், தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய வர்த்தக கொள்கைக்காகவும் உங்களது சிறந்த அலுவலகத்தை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.